செல்வமகள் சேமிப்பு திட்டம் (SSA) | சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்

செல்வமகள் சேமிப்பு திட்டம் (SSA) சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் உங்கள் குழந்தையின் எதிர்காலம் உங்கள் கையில் செல்வமகள் சேமிப்பு திட்டம் மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்குக் கொண்டு வரப்பட்ட திட்டம் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் (Sukanya Samriddhi Yojana Scheme). இத் திட்டம் தான் தமிழ் நாட்டில் செல்வ மகள் திட்டமாக செயல்பட்டு வருகிறது. செல்வமகள் சேமிப்பு திட்டம் விதிமுறை 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் இந்தக் கணக்கை அனைத்து அஞ்சலகங்களிலும் குறிப்பிட்ட வங்கிகளிலும் துவங்க முடியும். எப்போது இந்த செல்வமகள் சேமிப்பு திட்டம் துவங்கப்பட்டது சுகன்யா சம்ரிதி திட்டம் (Sukanya Samriddhi Accounts) என்பது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஜனவரி 22 தேதி 2015-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இது பெண் குழந்தைகள் மேம் பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டது. யார் இந்த சேமிப்பு திட்டத்தை தொடங்கலாம் (selva magal thittam): செல்வமகள் சேமிப்பு திட்டம் / selva magal thittam: ஒரு குடும்பத்தில் இருந்து இரண்டு பெண் குழந்தைகளு க்கு இந்தக் கணக்கை துவ...