தமிழ் வழி கல்வி பயின்ற சான்றிதழ் | PSTM Certificate in Tamil
.png)
தமிழ் வழி கல்வி பயின்றதற்கான சான்றிதழ் அப்படி என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு ஆங்கிலத்தில் PSTM Certificate என்று பெயர்.இந்த சான்றிதழ் எதற்காக வாங்க வேண்டும், இதை எதற்கு பயன்படுத்த வேண்டும் மேலும் அதை எப்படி பெற வேண்டும் என்பதையெல்லாம் இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க. PSTM சான்றிதழ்: PSTM Certificate இதற்கு Full Form Person Studied In Tamil Medium . அதாவது நீங்கள் தமிழ் வழி கல்வியில் பயின்றதற்கான ஆதாரமாக இந்த சான்றிதழை வாங்க வேண்டும். இதை எதற்கு வாங்க வேண்டும் என்றால் நீங்கள் ஏதேனும் பொதுத்தேர்வு எழுதும் போது அதில் மதிப்பெண்கள் அல்லது Rank List- ல் பின் தங்கியிருந்தால் அப்பொழுது இந்த PSTM Certificate உங்களுக்கு உதவும். ஏனென்றால் தமிழ்நாடு அரசு தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு தந்துள்ளது. உதாரணத்திற்கு: TNPSC தேர்வில் 1000 காலியிடங்கள் இருந்தால் அதில் 200 காலியிடங்கள் Tamil Medium படித்தவ...