2023 -ல் முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுக்காப்பு திட்டத்தில் 3,00,232 லட்சம் இலவசமாக பெறலாம்..!

 முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுக்காப்பு திட்டம் - 2023


Muthalvarin Pen Kulanthai Pathukappu Thittam

பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் 1992- ஆம் ஆண்டு தமிழக அரசால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கு தொகைகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இத்திட்டத்தில் வழங்கப்படும் தொகையினை பெண்குழந்தைகள் 18 வயது நிரம்பியதும் பெற்றுக்கொள்ளலாம். எனவே பெண் குழந்தைகள் உள்ளவர்கள் இத்திட்டத்தை தவறாமல் பயன்படுத்தி கொள்ளுங்கள். இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள், விதிமுறைகள் இருக்கிறது என்று இப்பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்:

இரண்டு வகையான திட்டங்கள்:

திட்டம்: 1

உங்களுக்கு ஒரே ஒரு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தைகள் இருக்கவே கூடாது. அப்படி உங்களுக்கு ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் அந்த குழந்தையின் பெயரில் வைப்பு தொகையாக ரூ. 50,000/- பவர் ஃபைனான்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவெலப்மெண்ட் கார்ப்பரேஷன் லிமிட் மூலம் வழங்கப்படும்.


திட்டம்: 2

உங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனியாக ரூ.25,000 வைப்பு தொகையாக வழங்கப்படும். அதற்கான பத்திரமும் உங்களுக்கு வழங்கப்படும். இதை நீங்கள் பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும்.

இத்திட்டத்தின் விவரங்கள்:

S.Noதிட்டங்கள் ஆரம்ப வைப்பு தொகை 18 ஆண்டுகளுக்கு பிறகு வழங்கப்படும் தொகை 
1.திட்டம் 1ரூ. 50,000/-ரூ.3,00,232
2.திட்டம் 2ரூ.25,000 (ஒவ்வொரு பெண் குழந்தைக்கும்)ரூ.1,50,117(ஒவ்வொரு பெண் குழந்தைக்கும்)

இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள்:

  • ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் இருக்க வேண்டும். ஆண் குழந்தைகள் இருக்க கூடாது.
  • பெற்றோர் 35 ஆண்டுகளுக்குள் கருத்தடை செய்திருக்க வேண்டும்.
  • குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு குறைவாக இருக்க வேண்டும்.
  • இந்த திட்டம் 01.08.2011 அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்த குழந்தைகளுக்கு பொருந்தும்.
இத்திட்டத்திற்கு எப்போது விண்ணப்பிக்க வேண்டும்.?

  • பெண் குழந்தை பிறந்து 3 ஆண்டு முடிவதற்குள் முதல்வரின் பெண் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வேண்டும்.

கல்வி தகுதி:

  • உங்கள் பெண் குழந்தைகள் 10-ஆம் வகுப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

இத்திட்டத்தை பெறுவதற்காக தேவைப்படும் ஆவணங்கள்:

  1. குடும்ப வருமான சான்றிதழ்.
  2. ரேஷன் கார்டு 
  3. ஆதார் கார்டு
  4. சாதி சான்றிதழ்
  5. திருமண சான்றிதழ்
  6. கருத்தடை சான்றிதழ்
  7. ஆண் குழந்தை இல்லை என்ற சான்றிதழ்.
  8. குழந்தையின் பிறப்பு சான்றிதழ்
  9. குடும்ப புகைப்படம்
  10. பெண் குழந்தையின் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

இந்த தொகை எப்போது வழங்கப்படும்.?

உங்கள் பெண் குழந்தைக்கு 18 வயது பூர்த்தி ஆன பிறகு இந்த தொகையை பெற்றுக் கொள்ளலாம். குறிப்பாக உங்கள் பெண் குழந்தை 10- ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் இடம்:

உங்கள் ஊரில் உள்ள BDO (Block Development Office) அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

புதுப்பித்தல்(Renewal):

முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பித்த பிறகு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை BDO அலுவலகத்திற்கு சென்று புதுப்பிக்க வேண்டும்.


Thank you @publicsevai.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

TN Marriage Assistance Scheme 2023: Registration, Eligibility & Benefits

தமிழ் வழி கல்வி பயின்ற சான்றிதழ் | PSTM Certificate in Tamil