தமிழ்நாட்டில் மட்டும் இருக்கும் பொன்மகன் திட்டத்தை கேள்விப்பட்டு இருக்கீங்களா?
பொன்மகன் திட்டம்
பொன்மகன் திட்டம்
பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டம் என்பது செப்டம்பர் 2015-ல் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டமாகும். இத்திட்டம் ஆண் குழந்தைக்காக மட்டுமே செயல்படுத்தப் பட்ட திட்டமாகும். இதில், தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் மட்டுமே சேரலாம்.
1.
10 வயதுக்குட்பட்ட மைனர் சிறுவனின் சார்பாக பெற்றோர் அல்லது guardian கணக்கைத் திறக்கலாம்.
2.
குறைந்தபட்ச ஆரம்ப வைப்புத்தொகை ரூ. 500 மற்றும் அதிகபட்ச வருடாந்திர வைப்புத்தொகை ரூ. 1.5 லட்சம்.
3.
பொன்மகன் சேமிப்பு திட்டத்தின் தற்போதைய வட்டி விகிதம் 7.6% ஆகும்.
4.
திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். இந்தத் திட்டத்தில் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் என்றாலும், அடுத்த 5 ஆண்டுகளை தொகுப்புகளாக அதிகரித்துக் கொள்ளலாம்.
5.
சம்பாதித்த வட்டி உட்பட முழுத் தொகையும் மேஜர் ஆனவுடன் ஆண் குழந்தைக்கு வழங்கப்படும்.
பொன்மகன் பொதுவாய்ப்பு நிதி திட்டம், தங்கள் மகனின் எதிர்காலத்திற்காக சேமிக்க விரும்பும் பெற்றோருக்கு ஒரு நல்ல வழி. அதிக வட்டி விகிதம் மற்றும் நீண்ட முதிர்வு காலம் திட்டத்தை மிகவும் கவர்ச்சிகரமான முதலீட்டு விருப்பமாக மாற்றுகிறது.
பொன்மகன் பொதுவாய்ப்பு நிதி திட்ட கணக்கை எவ்வாறு திறப்பது?
எவ்வளவு வட்டி கிடைக்கும்?
பொன்மகன் பொதுவாய்ப்பு நிதி திட்டம் ஒரு எளிய மற்றும் எளிதாக திறக்கக்கூடிய சேமிப்பு திட்டமாகும். தங்கள் மகனின் எதிர்காலத்திற்காக சேமிக்க விரும்பும் பெற்றோருக்கு இது ஒரு நல்ல வழி. இத்திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய் வீதம்,வருடத்திற்கு 12,000 ரூபாய் முதலீடு செய்தால், வட்டி விகிதம் 7.6%. அதனடிப்படையில் 15 ஆண்டுகள் இத்திட்டத்தில் 1,80,000 ரூபாய் முதலீடு செய்தால் 3,47,441 ரூபாய் முதலீடு வட்டியாக கிடைக்கும். மொத்தத்தில் முதிர்வு தொகை 5,27,446 ரூபாய் கிடைக்கும்.
Thank you @publicsevai
.png)
கருத்துகள்
கருத்துரையிடுக